டெலிகாம் துறைக்கு ரூ. 1000 கோடியை செலுத்திய வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடி நிலுவை தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா
Published on

வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.

இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி அரசுக்கு வழங்க வேண்டும். இதனை அடுத்து, வோடபோன் நிறுவனம் கடந்த 17ந்தேதி மத்திய அரசின் தொலைதொடர்பு துறைக்கு ரூ.2,500 கோடி வழங்கியது. இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்கவும் ஒப்புதலளித்தது.

இதன்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடியை இன்று செலுத்தியுள்ளது.

இதுபற்றி தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தியில், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கும் இன்னும் ஓரிரு நாட்களில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்து உள்ளது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையான ரூ.14 ஆயிரம் கோடியில், கடந்த திங்கட்கிழமை ரூ.2,197 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com