

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி Z ஃபோல்ட் 8 என்ற ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8 இதுவரை இல்லாத அளவில் இலகுவான 7.6-இன்ச் திரையுடன், 5.5-இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இவை 120Hz வேகத்தில் இயங்குகின்றன.
வெளிப்புறங்களில் சிறந்த பார்வைத் திறனுக்காக, பிரதான பேனல் 3,000 நிட்ஸ் வரை பிரகாசத்தை தருகிறது.
இதன் உள்ளே குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் உள்ளது. இது 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 17 இயங்குதளத்தில் ஒன் UI 9 உடன் இயங்குகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
மேலும் 4,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை அரை மணி நேரத்தில் 67% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அனைத்து விதமான கேமிங்கையும் எந்தவித இடற்பாடும் இல்லாமல் விளையாடும் வகையில், GPU Adreno 840 அம்சத்துடன் வடிமைக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, இதில் உள்ள 200MP பிரதான கேமரா சென்சார், அதனுடன் 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் டூயல் 50MP அமைப்புடன், டூயல் ரெக்கார்டிங் மற்றும் மை ஃபேன்கேம் மூலம் செல்ஃபிகளை ஆட்டோ-டிராக்கிங் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன.
இதில் 8-இன்ச் பிரதான டிஸ்ப்ளே மற்றும் 6.5-இன்ச் கவர் ஸ்கிரீன் உள்ளன. இவை இரண்டும் 3.000 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்தை எட்டுகின்றன. மேலும் விரிக்கும்போது வெறும் 4.1 மிமீ தடிமனைக் கொண்டுள்ளது.
மேலும், 5,000mAh பேட்டரியைக் கொண்ட முதல் சாம்சங் மடிக்கக்கூடிய போன் இதுவாகும். மேலும் இது ஏழு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களுடன், ஜெமினி நோட்புக் மற்றும் நவ் ப்ரீஃப் போன்ற ஆழமான கேலக்ஸி Al கருவிகளுடனும் வருகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 8-ன் 256GB மாடலின் விலை ரூ. 1,79,999 ஆகவும், 512GB மாடலின் விலை ரூ. 1,99,999 ஆகவும், மற்றும் 1TB மாடலின் விலை ரூ. 2,39,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போன் லாவெண்டர், கிராஃபைட் மற்றும் கிரீம் ஆகிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மட்டும் பிரத்யேகமாக பிஸ்தா நிறத்திலும் கிடைக்கிறது. இந்த போன் ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.