ரூ. 37,999 விலையில் புது கேலக்ஸி வாட்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடலை போன்றே கேலக்ஸி வாட்ச் 9 மாடலும் வியர் ஓ.எஸ். மூலம் இயங்குகிறது.
Galaxy Watch Ultra 2 and Galaxy Watch 9
Published on

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 9 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் அளவில் பெரிய பேட்டரி, அதிக பிரகாசமான டிஸ்ப்ளே, ஏ.ஐ. சார்ந்த உடல் ஆரோக்கிய அம்சங்கள், மேம்பட்ட ஹார்டுவேர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு பயன்தரும், கேலக்ஸி வாட்ச் 9 மாடல் அனைவரும் பயன்படுத்து ஏதுவாக அன்றாட உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் அம்சங்களுடன் வருகிறது. புதிய அணியக்கூடிய சாதனங்கள் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, சீரிஸ் 11 மற்றும் பிக்சல் வாட்ச் 5 மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள்:

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மாடல் 47 மில்லிமீட்டர் அளவில் டைட்டானியம் கேஸ், சஃபையர் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே, 800mAh பேட்டரி கொண்டுள்ளது. இது முந்தைய அல்ட்ரா மாடலில் இருந்ததை விட 35 சதவீதம அளவில் பெரியது ஆகும். இதில் 1.52 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 498x498 பிக்சல் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் SDW6100 பிராசஸர், 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது.

இத்துடன் எல்.டி.இ. ப்ளூடூத் 6.0, டூயல் ஃப்ரீக்வன்சி ஜி.பி.எஸ்., என்.எப்.சி., வைபை, 10ATM, IP69K, MIL-STD-810H மற்றும் EN13319 சான்றுகளுடன் வருகிறது.

வாட்ச் 9 அம்சங்கள்:

கேலக்ஸி வாட்ச் 9 மாடல் 40 மில்லிமீட்டர் மற்றும் 44 மில்லிமீட்டர் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் கேஸ், சஃபையர் க்ரிஸ்டல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் 44 மில்லிமீட்டர் மாடல் 1.47 இன்ச் 480x480 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 40 மில்லிமீட்டர் மாடலில் 1.34 இன்ச் 438x438 பேனலுடன் கிடைக்கிறது.

இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் SDW6100 பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, முறையே 445mAh மற்றும் 390mAh பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அல்ட்ரா 2 மாடலை போன்றே கேலக்ஸி வாட்ச் 9 மாடலும் வியர் ஓ.எஸ். மூலம் இயங்குகிறது.

விலை விவரங்கள்:

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 ரூ. 64,999

கேலக்ஸி வாடச் 9 (40mm) ரூ. 37,999

கேலக்ஸி வாட்ச் 9 (44mm) ரூ. 40,999

புதிய கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் கேலக்ஸி வாட்ச் 9 மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com