Pabble 5, Mythos 5: ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை

அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.
Pabble 5, Mythos 5: ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை
Published on

செயற்கை நுண்ணறிவில் முன்னணி வகிக்கும் ஆந்த்ரோபிக் உடைய 'கிளாட் பேபிள் 5', 'மித்தோஸ் 5' ஆகிய மேம்பட்ட ஏஐ மாடல்கள் பயன்பாட்டுக்கு அமெரிக்கா அதிரடி தடை விதித்துள்ளது.

உத்தரவு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள பயனர்கள் யாரும் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க வர்த்தகத் துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, 'பேபிள் 5' மாடலானது எந்தவொரு கணினி பாதுகாப்பு கட்டமைப்புகளையும் உடைக்கும் அசாதாரணத் திறன் கொண்டது என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதன் மூலம் சைபர் தாக்குதல்களை நடத்த கடத்தல்காரர்களோ அல்லது எதிரி நாடுகளோ நடத்தலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.

நிறுவனம் கண்டனம்

அமெரிக்க அரசின் இந்த தடையை எதிர்த்து ஆந்த்ரோபிக் நிறுவனம்,

"எங்கள் மாடலில் உள்ள மிகச் சிறிய, கட்டுப்படுத்தக்கூடிய குறைபாட்டை காரணம் காட்டி, உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சேவையை முடக்குவது முறையான நடவடிக்கை அல்ல.

சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கனவே பல கடுமையான கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்துள்ளோம்." என வாதிட்டுள்ளது.

ஆந்த்ரோபிக் vs அமெரிக்க அரசு

அமெரிக்க அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

அமெரிக்க ராணுவத்தின் உளவு அமைப்புகள் மக்களை கண்காணிக்கவும், தானியங்கி ஆயுதங்களை உருவாக்குவதற்கும் தங்கள் ஏஐ மாடல்களை வழங்க ஆந்த்ரோபிக் மறுத்தது.

தங்கள் தொழில்நுட்பத்தை ராணுவ அழிவு வேலைகளுக்குத் தர முடியாது என ஆந்த்ரோபிக் நிறுவனம் தார்மீக ரீதியாக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்த மோதலின் உச்சகட்டமாகவே தற்போதை தடை பார்க்கப்படுகிறது.

பேபிள் 5

சமீபத்தில்தான் ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஏஐ மாடலாக 'பேபிள் 5 ஐ அறிமுகப்படுத்தியது.

இது ஒபன் ஏஐயின் சாட்ஜிபிடி-க்கு பெரும் சவாலாக விளங்கிய நிலையில் தடையை சந்தித்துள்ளது.

ஆந்த்ரோபிக் ஏற்க மறுத்த அமெரிக்க ராணுவத்துடனான ஒப்பந்தத்தை ஒபன் ஏஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com