குறைந்த விலை ரீசார்ஜ்-ஐ திடீரென நீக்கிய ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 579 மற்றும் ரூ. 619 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
Airtel Logo
Published on

ஏர்டெல் கடந்த ஆண்டு, அதிவேக இணையம், அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்கிய தனது மிகவும் மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. இந்த குறிப்பிடத்தக்க விலை உயர்வுக்கு ஒரு வருடம் கழித்து, ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தனது இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் இருந்து நீக்கியுள்ளது.

ரூ. 299 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்திற்கு பதிலாக, இப்போது ரூ. 349 ரீசார்ஜ் நிறுவனத்தின் மிகவும் மலிவான ரீசார்ஜாக மாறியள்ளது. இது முந்தைய திட்டங்களைப் போன்ற பலன்களுடன் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. இதற்கிடையில், நிறுவனம் தனது ரூ. 579 மற்றும் ரூ. 619 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களையும் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

ரீசார்ஜ் நீக்கம்:

பிரபல தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ஏர்டெல், தனது ரூ. 299 பிரீபெய்ட் ரீசார்ஜ் ஆஃபரை நீக்குவதற்கும் நிறுத்துவதற்கும் தனது இணையதளத்தை புதுப்பித்துள்ளது .

இந்த ரீசார்ஜ், 28 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா, மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வழங்கி வந்தது. மேலும், இது ஒரு நாளைக்கு 100 SMS, இலவச காலர் ட்யூன்கள், மற்றும் ஒரு பெர்பிளக்சிட்டி ப்ரோ AI சந்தா ஆகியவற்றையும் வழங்கியது.

இதன் மூலம், ரூ. 349 ரீசார்ஜ் திட்டம் இப்போது நாட்டில் ஏர்டெல் வழங்கும் மலிவு விலை ரீசார்ஜ் பேக் ஆகும். இந்த திட்டம் அன்லிமிட்டெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 SMS ஆகிய பலன்களை வழங்குகிறது.

மேலும், இது 28 நாட்கள் வேலடிட்டி கொண்டுள்ளது. சந்தாதாரர்கள் ஆறு மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தாவையும், இலவச ஏர்டெல் ஹலோடியூன்ஸ் மற்றும் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ஆகியவற்றையும் இலவசமாக பெறலாம்.

இது தவிர, பயனர்கள் இதே பலன்களை வழங்கும் ரூ. 399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் தேர்வு செய்யலாம். இதில் தினசரி அதிவேக இணைய டேட்டா அளவு 2.5 ஜிபி-ஆக உள்ளது.

கூடுதலாக, இது ஆப்பிள் மியூசிக் சந்தாவிற்கு பதிலாக 28 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது. முன்பு குறிப்பிட்டபடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிறுவனம் ரூ. 249 ரீசார்ஜ் பேக்கின் விலையை ரூ. 299 ஆக உயர்த்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com