குறைந்த விலையில் புது குரோம்புக் மாடல்களை அறிமுகம் செய்யும் ஹெச்பி

ஹெச்பி நிறுவனம் குறைந்த விலை குரோம்புக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்பி குரோம்புக்
ஹெச்பி குரோம்புக்
Published on

ஹெச்பி நிறுவனம் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய குரோம்புக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய குரோம்புக் மாடல்களின் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புது குரோம்புக் மாடல்களின் சரியான வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை 2021 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், குறைந்த விலை குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெறும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை புது ஹெச்பி குரோம்புக் மாடலில் 14 இன்ச் ஹெச்டி 1366x768 பிக்சல், 2-செல் 45Wh பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 10 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கும். கனெக்டிவிட்டிக்கு இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப் ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ப்ளூடூத் 5, வைபை வழங்கப்படலாம்.

இத்துடன் இன்டெல் செலரான் என்4020 பிராசஸர், இன்டகிரேட் செய்யப்பட்ட UHD iGPU கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com