ஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது. #Airtel #RelianceJio
ஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ
Published on

மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ கேட்டு கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தை மே 11-ம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றன. ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.


இ-சிம் கார்டு, ஐபோனில் உள்ள சிம் கார்டுடன் பிரத்யேக நெட்வொர்க் நோட் மூலம் இணைந்து கொள்ளும். இந்த நோட் இ-சிம் கார்டில் உள்ள ப்ரோஃபைல் அலோகேஷனில் ஆப்பரேட்டர், சிம் தகவல்கள், பின், ரிமோட் ஃபைல் மேனேஜ்மென்ட் போன்ற தகவல்களை கொண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்திருக்கும் புகாரில் ஏர்டெல் சார்பில் இந்தியாவில் இசிம்-களுக்கான ப்ரோவிஷனிங் நோட்களை செட்டப் செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களில் வழங்கும் நோட்கள் இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கிறது, என்றும் விதிமுறைகளை மீறும் செயல் என ஜியோ தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com