விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
நோக்கியா 2.3
நோக்கியா 2.3
Published on

சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனினும், வெளியீட்டு தேதி பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். வசதி, 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி., 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் இதன் விலை 109 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 8,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com