அடுத்த வாரம் அறிமுகமாகும் புது விவோ Fold மாடல்

இந்த ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
அடுத்த வாரம் அறிமுகமாகும் புது விவோ Fold மாடல்
Published on

விவோ நிறுவனம் டீசர்களை தொடர்ந்து தனது முற்றிலும் புதிய X Fold 6 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 26-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் புளூ, சால்ட் லேக் மற்றும் போலார் நைட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ X Fold 6 மாடல் சக்திவாய்ந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் தலைசிறந்த கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருககிறது.

இதில் சக்திவாய்ந்த 200MP ட்ரூ ஃபோல்டபில் சென்சார், மற்றும் Zeiss APO சூப்பர் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் இந்த மாடல் அறிமுகமாகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிநவீன ஒளிரும் பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் சாம்சங் M14 ஒளிரும் பாகத்தால் இதன் உள்புற ஸ்கிரீன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பாகம் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இது ஆகும். இது அதிக பிரைட்னஸ் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டை ஆதரிக்கும் திறன் கொண்டிருக்கிறது.

பெரிய திரை கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் டிமென்சிட்டி 9500 சூப்பர் எடிஷன் பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி விவோ நிறுவனம் தனது ட்ரூ வயர்லெஸ் 5 ப்ரோ இயர்போன் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் இன்டிபென்டென்ட் Hi-Fi DAC சிப், 4 மைக்ரோபோன்கள் கொண்ட டீப்-சீ இன்டெலிஜென்ட் நாய்ஸ் ரிடக்ஷன் மற்று்ம ஹைப்ரிட் டிரைவர் ப்யூர் சவுண்ட் ஆர்கிடெக்ச்சர் போன்ற வசதிகள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com