இது லிஸ்ட்-லயே இல்லையே... ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் களமிறங்கும் நத்திங்!

சி.எம்.எஃப். சமீபத்தில் வாட்ச் 3 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்வாட்ச்
Published on

நத்திங் நிறுவனம் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் தனது வியாபாரத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இந்த தவல்களில் துளியும் உண்மையில்லை என நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மையாக்ம பட்சத்தில் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல் வருகிற செப்டம்பர் மாத வாக்கில் அறிமகம் செய்யப்படலாம் ன கூறப்படுகிறது.

நத்திங் வாட்ச் விவரங்கள்:

நத்திங் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலிலும் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் வழங்கும் என்று கூறப்படுகிறது. விலையை பொருத்தவரை இந்த மாடல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 29,000) குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் சீன தந்தையிலும், தேர்வு செய்யப்பட்ட இதர நாடுகளிலும் நத்திங் ஸ்மார்ட்வாட்ச் படிப்படயாக அறிமுகம் செய்யப்படலாம். இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மையாகும் பட்சத்தில் இது நத்திங் சாதனங்கள் பிரிவில் தற்போது நிலவி வரும் பெரும் இடைவெளியை பூர்த்தி செய்யும்.

சி.எம்.எஃப். பிரான்டிங்:

ஸ்மார்ட்போன் தொடங்கி ஆடியோ சாதனங்கள், அக்சஸரீக்கள் என நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக தனத சாதனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்திக் கொண்டே தான் வருகிறது. இதுவரை ஸ்மார்ட்வாட்ச்களை பொருத்தவரை நத்திங் நிறுவனம் தனது பட்ஜெட் சாதனங்கள் பிரான்டான சி.எம்.எஃப். பிரான்டிங்கிலேயே விற்பனை செய்து வருகிறது.

இந்திய சந்தையில் சி.எம்.எஃப். தற்போது இரண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவை சிஎ..ஃப். வாட்ச் 2 ப்ரோ மாடல் ரூ. 4,999 அல்லது ரூ. 5,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சி.எம்.எஃப். சமீபத்தில் வாட்ச் 3 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்தது.

அம்சங்களை பொருத்தவரை சி.எம்.எஃப். தனது ஸ்மார்ட்வாட்ச்களில் AMOLED டிஸ்ப்ளே, பில்ட்-இன் ஜி.பி.எஸ்., ப்ளூடூத் காலிங மற்றும் அதிகபட்சம் 13 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com