80 மணி நேர பிளேக், ANC சப்போர்ட் கொண்ட போட் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

போட் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் மாடல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
Boat Nirvana Eutopia 2 ANC
Published on

போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நிர்வானா யூடோபியா 2 ஹெட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹெட்போன் டூயல் டிரைவர்கள், அதிகபட்சம் 45db அடாப்டிவ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ, 3டி ஸ்பேஷியல் ஆடியோ, ப்ளூடூத் 5.4, கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் ஏ.ஐ. சார்ந்த காலிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன் போட் ஹியரபில்ஸ் ஆப் சப்போர்ட் கொண்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் EQ செட்டிங்ஸ் மற்றும் இதர கண்ட்ரோல்களை இயக்க முடியும்.

ANC சப்போர்ட்:

இதில் உள்ள ஏஐ ENx தொழில்நுட்பம் மூலம் பின்னணி இரைச்சல் மற்றும் சத்தத்தை குறைக்கும். இந்த ஹெட்போனில் 800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 மணி நேர பிளேபேக் வழங்கும், ANC இயக்கும் போது பேட்டரி பேக்கப் நேரம் 50 நேரமாக குறையும். இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் கிடைக்கும்.

போட் நிர்வானா யூடோபியா 2 மாடல் ஓவர்-இயர் மடிக்கக்கூடிய டிசைன் கொண்டுள்ளது. இந்த ஹெட்போன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இதில் பிளேபேக் கண்ட்ரோல், வால்யூம் அட்ஜஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ANC மோட் போன்ற அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெமரி ஃபோம் குஷன்களை கொண்டிருக்கும் இந்த ஹெட்போன் 165.6x82.7x195.6 மில்லிமீட்டர் அளவு கொண்டிருக்கிறது. இந்த ஹெட்போனுடன் கேரியிங் கேஸ், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கேபிள், AUX கேபிள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

புதிய போட் நிர்வானா யூடோபியா 2 ANC மாடலின் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக குறுகிய காலக்கட்டத்திற்கு இந்த ஹெட்போன் ரூ. 4,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹெட்போன் காஸ்மிக் பிளாக் மற்று்ம யூடோபியன் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஹெட்போன் போட் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com