வேற லெவல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்

புதிய விவோ ஸ்மார்ட்போன இருவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Vivo T5 Lite 5G
Published on

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த விவோ T5 லைட் ஸ்மாரட்போனின் விற்பனை துவங்கியது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விவோ T5 லைட் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 6500mAh பேட்டரியுடன் வருகிறது.

இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ T5 லைட் ஸ்மாரட்போன் 50MP பிரைமரி கேமரா, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 44 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

விவோ T5 லைட் அம்சங்கள்:

அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ T5 லைட் 5ஜி மாடல் 6.74 இன்ச் HD+ 720x1600 பிக்சல் LCD பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 0.08MP இரண்டாவது லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய விவோ T5 லைட் ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மற்றும் 44 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

விவோ T5 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 21,999 என்றும் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 24,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டுவிலைட் ஷேடோ மற்றும் வேவ் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ. அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com