முன்பதிவில் மாஸ் காட்டிய சாம்சங் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள்

இந்திய சந்தையில் இதே அளவிலான எண்ணிக்கையை எட்ட 15 நாட்கள் தேவைப்பட்டன.
samsung Galaxy Z Fold8
Published on

சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 8 ஆகியவற்றிற்கான உலகளாவிய முன்பதிவுகள், முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடும் போது 30% அதிகரித்துள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முன்பதிவுகளின் போது, ​​கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 8 ஆகிய இரண்டிற்கும் கிராஃபைட் (Graphite) நிறம் முதன்மை தேர்வாக அமைந்தது. அதேவேளையில், கேலக்ஸி Z ப்ளிப் 8 மாடலுக்கான முன்பதிவுகளில் பின்க் (Pink) நிறம் முன்னிலை வகித்தது.

இந்திய முன்பதிவு நிலவரம்:

இந்தியாவில், கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள்ளேயே முன்பதிவுகள் 2,71,000 யூனிட்டுகளை கடந்துள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முந்தைய தலைமுறை மாடல்களான கேலக்ஸி Zஃபோல்டு 7 மற்றும் Z ப்ளிப் 7 ஆகியவை இந்திய சந்தையில் இதே அளவிலான எண்ணிக்கையை எட்ட 15 நாட்கள் தேவைப்பட்டன.

இந்தியாவில் புதிய கேலக்ஸி Z சீரிஸ் போன்களுக்கு, முன்பணம் ஏதுமின்றி 30 மாதங்களுக்கான வட்டியில்லா மாத தவணை முறை (no-cost EMI) திட்டத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் முதன்முறையாக வழங்கப்படும் ஒரு திட்டமாகும்.

விலை விவரங்கள்:

கேலக்ஸி Z ஃபோல்டு 8 அல்ட்ரா: ஆரம்ப விலை ரூ. 1,99,999

இந்த ஸ்மார்ட்போன் வயலெட் ஷேடோ, கிராஃபைட், க்ரீம், கிரீன் ஷேடோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது

கேலக்ஸி Z ஃபோல்டு: ஆரம்ப விலை ரூ. 1,79,999

இந்த ஸ்மார்ட்போன் லாவெண்டர், கிராஃபைட், க்ரீம் மற்றும் பிஸ்டாச்சியோ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது

கேலக்ஸி Z ப்ளிப் 8: ஆரம்ப விலை ரூ. 1,24,999

இந்த ஸ்மார்ட்போன் பின்க், கிராஃபைட், க்ரீம் மற்றும் மின்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் (Samsung Experience Store) மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com