

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மாடல் அதிக செயல்திறன், மேம்பட்ட டிசைன் மற்றும் நீண்ட கால மென்பொருள் சப்போர்ட் உடன் வருகிறது.
புதிய கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஃபிளாட் ரியர் பேனல், மூன்று கேமரா சென்சார்களை கொண்ட கேமரா ஐலேண்ட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் ஆல்ஃபா பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதோடு டெக்ஸ்ச்சர் மற்றும் லெதர் போன்ற பேக் பேனல் கொண்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் IP64 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மற்றும் UFS 3.1 ஸ்டோரஜ் உடன் வருகிறது.
6.7-இன்ச் (1080×2340 பிக்சல்) FHD+ Infinity-O Super AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு
ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 710 GPU
6 ஜிபி / 8 ஜிபி LPDDR5X ரேம்
128 ஜிபி / 256 ஜிபி UFS 3.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 8.5
50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS
5MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
2MP மேக்ரோ லென்ஸ், f/2.4
12MP செல்ஃபி கேமரா, f/2.2
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி SA / NSA, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
GPS + GLONASS, USB Type-C, NFC
6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
புதிய சாம்சங் கேலக்ஸி F70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 23,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 25,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 08-ஆம் தேதி தொடங்கும் ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் விற்பனைக்கு வருகிறது.