ரூ. 4 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி.. விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?

போக்கோ F6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரூ. 4 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி.. விற்பனைக்கு வந்த போக்கோ ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?
Published on

போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் F6 5ஜி இந்திய விற்பனை துவங்கியது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில், போக்கோ F6 5ஜி மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் போக்கோ F6 5ஜி மாடல் பிளாக் மற்றும் டைட்டானியம் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுதவிர எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழஹ்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் மாதம் ரூ. 2 ஆயிரத்து 166 வீதம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com