10,000mAh பேட்டரி, 80வாட் சார்ஜிங்... புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஒப்போ!

புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் கொண்டிருக்கும் என தகவல்.
Oppo A7 Pro Max
Published on

ஒப்போ நிறுவனம் தனது A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒருவழியாக அறிவித்தது. கடந்த சில தினங்களாக புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களை ஒப்போ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

அதன்படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 04-ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய A7 ப்ரோ மேக்ஸ் 10,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் ஒப்போ நிறுவனத்தின் முதல் ஸ்மாரட்போன் ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.

மூன்று நிறங்கள்:

வலைதள விவரங்களின் படி ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் பிளாக், ஆரஞ்சு மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும்.

முன்னதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் கீக்பென்ச் பென்ச்மார்க் தளங்களில் லீக் ஆன தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் 8.47mm தடிமனாக இருக்கும் என்றும் இதன் எடை 226 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 120Hz OLED ஃபிளாட் ஸ்கிரீன், 50MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது.

இதுதவிர புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட், 10,000mAh சிங்கிள் செல் பேட்டரி மற்றும் 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com