

ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் தனது மலிவு விலை ஸ்மார்ட்போன் சீரிசை ஒன்பிளஸ் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் N6 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன், பேட்டரி லைஃப் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதோடு, பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இல்லாத 3.5mm ஹெட்போன் ஜாக் அம்சத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.
ஒன்பிளஸ் N6x ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ (1570×720 பிக்சல்கள்) எல்.சிடி. ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டைமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் MIL STD-810H தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றிருக்கிறது.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஒன்பிளஸ் N6x கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்ட் CE5 மாடலில் இருந்து பல அம்சங்களை கடன் வாங்கியுள்ளது. இதன் மேல் இடதுபுற ஓரத்தில் செங்குத்தாக அமைந்துள்ள டேப்லெட் வடிவ பின்புற கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளது.
அதே சமயம், முன்பக்கத்தில் வாட்டர்டிராப் நாட்ச் மற்றும் ஒப்பீட்டளவில் தடிமனான பெசல்களைக் கொண்ட டிஸ்ப்ளே ஆகியவை, இது ஒரு என்ட்ரி லெவல் மாடல் என்பதை பிரதிபலிக்கின்றன.
இந்தியாவில் ஒன்பிளஸ் N6x-ன் விலை, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட்டிற்கு ரூ. 19,999-ல் தொடங்குகிறது.
இது 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட்டிலும் வருகிறது. இந்த கைபேசி பர்கண்டி ரெட் மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் N6x-க்கான விற்பனை, ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா மற்றும் பிற தளங்களில் ஆகஸ்ட் 04-ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்குகிறது.