6500mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

புதிய ஐகூ ஸ்மார்ட்போன் அறிமுக சலுகைகளுடன் ஜூலை 30-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
iQOO Z11 Lite
Published on

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய Z11 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியுடன் வருகிறது.

அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிிபி வரை விர்சசுவல் ரேம், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

புதிய ஐகூ ஸ்மார்ட்போன் ஏ.ஐ. அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 ஓ.எஸ். அப்டேட்கள், 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என ஐகூ தெரிவித்துள்ளது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 0.08MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி 2.0 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விலை விவரங்கள்:

புதிய ஐகூ Z11 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சோலார் ஃபிளேம் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விற்பனை ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது.

அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com