வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4 லட்சத்திற்கு காப்பீடு வழங்கும் ஏர்டெல் சலுகை

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் ரூ. 4 லட்சத்திற்கான கப்பீடு வழங்கப்படுகிறது.
ஏர்டெல்
ஏர்டெல்
Published on

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 599 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ரூ. 4 லட்சத்திற்கான காப்பீடு திட்டம் வழங்கப்படுகிறது. 

84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் காப்பீடு திட்டத்தை பாரதி ஆக்சா வழங்குகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வாடிக்கையார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் இது மற்ற வட்டாரங்களிலும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த சலுகையில் வழங்கப்படும் காப்பீடு சலகை 18 முதல் 54 வயதுடைய அனைவருக்கும் வழங்கப்பசுகிறது. இதற்கென மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏறப காப்பீடு திட்டத்தின் நகல் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காப்பீடு திட்டத்தை முழுக்க டிஜிட்டல் முறையில் மேற்கொண்டு, நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல்முறை ரீசார்ஜ் செய்து எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் தேங்ஸ் அல்லது ஏர்டெல் ரீடெயிலர் மூலம் காப்பீடு சலுகையை பெற்றுக் கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com