காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது.
டாடா பன்ச்
டாடா பன்ச்
Published on

டாடா  மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமான மூன்றே மாதங்களில் புதிய டாடா பன்ச் விலை ரூ. 16 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா பன்ச் பியூர் மற்றும் பியூர் ரிதம் என இரண்டு வேரியண்ட்களின் விலை ரூ. 16 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. 'நிறுவனத்தின் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்,' என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. 

டாடா பன்ச் டாப் எண்ட் மாடல்களான கிரியேட்டிவ் மற்றும் கிரியேட்டிவ் இரா விலைகள் முறையே ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் பிரபல மாடல்களில் ஒன்றாக டாடா பன்ச் மாறி வருகிறது. இந்த மாடலுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக இதற்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com