உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று தங்கம்: வெற்றியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்த போட்ஸ்வானா

10 முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை வீழ்த்தியது.4x400மீ தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக ஆப்பிரிக்கா நாடு தங்கம் வென்றது.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று தங்கம்: வெற்றியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்த போட்ஸ்வானா
Published on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது.

4x400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்லுவதும் இதுவே முதன்முறை. இந்த வரலாற்று வெற்றியை கொண்டா அந்நாட்டு அதபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

நேற்று போட்ஸ்வானாவின் லீக் பெகெம்பிலோ எப்பி, லெட்சில் டெபோகோ, பயபோ என்டோரி, புசாங் கொலன் கெபிநாட்ஷிபி ஆகியோர் சாதனைப் படைத்தார். கடந்த 10 முறை சாம்பியன்ஷின் வென்ற அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. தென்ஆப்பிரிக்கா அணி 3ஆவது இடம் பிடித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com