மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா.. 13-0 கணக்கில் அபார வெற்றி

முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்ததுபிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.
மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தாய்லாந்தை பந்தாடிய இந்தியா.. 13-0 கணக்கில் அபார வெற்றி
Published on

மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ராஜ்கிர் மைதானத்தில் வைத்து மாலை 4.45 மணிக்குத் தொடங்கிய போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்டுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்துள்ளது.

குறிப்பாக இளம் இந்திய வீராங்கனை தீபிகா அதிகபட்சமாக ஐந்து கோல்களை விளாசினார். ஆட்டத்தில் 3வது, ,19வது, 43வது, 45வது, 45வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

மேலும் பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும் பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர். அடுத்ததாக வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சீனாவுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com