சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
விஸ்வநாதன் ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த்
Published on

சென்னை:

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன.

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com