புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது உ.பி. யோதாஸ்

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உ.பி. அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தியது உ.பி. யோதாஸ்
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் உ.பி. யோதாஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதியது. இதில் ஆரம்பம் முதலே உ.பி. அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், உ.பி. யோதாஸ் அணி, அரியானா அணியை 31-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இது உ.பி. அணிக்கு கிடைத்த 11-வது வெற்றி ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com