தைபே ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.
tanvi sharma, unnati hooda
Published on

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தேவிகா சிஹாக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 23-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய தன்வி ஷர்மா 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com