புரோ கபடி லீக்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய யு மும்பா

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லி, உ.பி. அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
புரோ கபடி லீக்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய யு மும்பா
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டி 32-32 என்ற புள்ளிக்கணக்கில் சமனில் முடிந்தது. உபி யோதாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகளுக்கு இடையிலான போட்டியும் 22-22 என சமனில் முடிந்தது.

இதன்மூலம் யு மும்பா அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.

புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com