ஐந்து வீரர்கள் பங்கேற்கும் ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியை இந்திய மகளிர் அணி டிரா செய்தது.இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
இந்திய ஆக்கி அணி வீரர்கள் 
இந்திய ஆக்கி அணி வீரர்கள் 
Published on

லாசானே:

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது.

இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மலேஷியாவை 7-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் போலந்தை இந்தியா வீழ்த்தியது.

புள்ளிகள் அடிப்படையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியும் போலந்து அணியும் மோதின. இதில் 6-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்றது.

பெண்கள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்திய மகளிர் அணி இழந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com