

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆக.15ம் தேதி காலேயில் தொடங்கவுள்ளது. இரண்டாவது போட்டி ஆக.23ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர். முதலில் நிதிஷ் குமார் ரெட்டி, ராணா, பும்ரா என பந்துவீச்சாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு பதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக சர்ஃப்ராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்திய அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரன்ஸ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃப்ராஸ் கான்.