சின்சினாட்டி ஓபன்: ஸ்வரேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன்: ஸ்வரேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் பப்லோ கேரினோ உடன் மோதினார்.

இதில் ஸ்வரேவ் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனை எதிர்கொள்ள இருந்தார். தாம்சன் காயம் காரணமாக விலகியதால் சின்னர் காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com