விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்
Published on

லண்டன்

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-4, 6-4, 7-6 (17-15) என்ற செட் கணக்கில் நூரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டு களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com