மொராக்கோ ஓபன்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி போராடி தோல்வி

மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோற்றனர்.
மொராக்கோ ஓபன்: அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி போராடி தோல்வி
Published on

ரபாட்:

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர், அலெக்சாண்டர் ஜோடியுடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 5-7 என முதல் செட்டை இழந்தது. 2-வது செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com