வூஹான் ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.
Aryna Sabalenka
Published on

பீஜிங்:

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் சபலென்கா 6-3, 5-7, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com