

ஜெர்மனியில ஹம்பர்க் டென்னிஸ் ஓபன் போட்டி நடைபெற்றது. இது பெண்களுக்கான போட்டி மட்டும் ஆகும். நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் தமரா கோர்பாட்ஸ்ச்- ஹங்கேரியின் அன்னா போண்டர் ஆகியோர் மோதினர். இதில் தமரா கோர்பாட்ஸ்ச் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜெர்மனியில் நடைபெறும் ஹம்பர்க் ஓபனை இதற்கு முன்னதாக ஸ்டெபி கிராஃப் 1992-ம் ஆண்டு வென்றிருந்தார். அதன்பின் இந்த ஹம்பர்க் ஓபனை தற்போது தமரா கோர்பாட்ஸ்ச் வென்றுள்ளார். இதன்மூலம் 34 வருடத்திற்குப் பிறகு ஜெர்மனி நாட்டிச் சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
தமரா கோர்பாட்ஸ்ச் முதல் செட்டில் 25-ல் 18 முதல் சர்வீஸ் பாயிண்ட்-ஐ பெற்றார். 15-ல் 10-ஐ வென்று 3-0 என முன்னிலை பெற்றார்.
ஸ்டெபி கிராஃப்க்குப் பிறகு 4 முறை ஜெர்மனி வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த 3 முறையும் தோல்வியை சந்தித்துள்ளனர். தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
தமரா கோர்பாட்ஸ்ச் வெல்லும் 2-வது ஒற்றையர் பட்டம் இதுவாகும். மேலும், அன்னா போண்டருக்கு எதிராக அவரது வெற்றி 5-0 என நீடிக்கிறது.