விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெறும் வீராங்கனைக்கு பரிசுத்தொகை தெரியுமா?

விம்பிள்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது.இதில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.
விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெறும் வீராங்கனைக்கு பரிசுத்தொகை தெரியுமா?
Published on

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.

இந்நிலையில், விம்பிள்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் சாம்பியன்களுக்கு தலா ரூ.28 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு தலா ரூ.13 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.534 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் அதிகமாகும். முதல் சுற்றில் வெளியேறும் போட்டியாளர்கள் 63 லட்சம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com