சிட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.
venus williams
Published on

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரிய வீராங்கனை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டரியா கசட்கினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com