ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து வீரர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் யூகோ ஹம்பர்ட் தோல்வி அடைந்தார்.
ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து வீரர்
Published on

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரான்சின் யூகோ ஹம்பர்ட், நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-4 என யூகோ ஹம்பர்ட் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிரீக்ஸ்புர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் யூகோ ஹம்பர்ட் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் சமீபத்தில் நடந்த ஏபிடி ஓபன் 13 டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com