ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.இதில் முன்னணி வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாஸ் தோல்வி அடைந்தார்.
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி
Published on

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் வான் டி ஜன்செல்ப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜன்செல்ப் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com