இத்தாலி ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி அடைந்த சிட்சிபாஸ்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி அடைந்த சிட்சிபாஸ்
Published on

ரோம்:

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.

இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அவர் 2வது செட்டை 5-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

இறுதியில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com