

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகதா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய தியாபே 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் தியாபே, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவுடன் மோதுகிறார்.