

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டு வீராங்கனையான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் இன்று நடந்த மற்றொரு அரையிறுதியில் சிலியின் அலெக்சாண்ட டபிலோ, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிலி வீரர் முதல் செட்டை 7-6 (8-6) என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய ரபேல் ஜோடார் 6-4 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ரபேல் ஜோடார் 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நள்ளிரவு நடைபெற உள்ள இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார், அமெரிக்காவின் டெய்ல்ஸ் பிரிட்ஸ் உடன் மோதுகிறார்.