கனடா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
கனடா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா
Published on

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தேர்வாகினர்.

பெண்கள் ஒற்றையரில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் கியோ ஹான்யூ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரிவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com