இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், படோசா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், படோசா
Published on

ரோம்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசிய வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதினார். இதில் படோசா

6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com