பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ் திடீர் விலகல்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் திடீரென விலகினார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சிட்சிபாஸ் திடீர் விலகல்
Published on

மாட்ரிட்:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் ஆர்தர் பில்ஸ் 2-0 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சிட்சிபாஸ் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென அறிவித்தார். இதையடுத்து, ஆர்தர் பில்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் ஆர்தர் பில்ஸ், கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com