ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றிலும் சின்னர் வெற்றி

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது. 3-வது சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றிலும் சின்னர் வெற்றி
Published on

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றார்.

நாளை நடைபெற அரையிறுதியில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com