கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சின்னருக்கு அதிர்ச்சி அளித்த மென்சிக்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சின்னருக்கு அதிர்ச்சி அளித்த மென்சிக்
Published on

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் முதல் செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் 2வது செட்டை 6-2 என எளிதில் வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மென்சிக் 6-3 என போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் சின்னர் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com