பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்
Published on

பாரிஸ்:

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com