பெர்லின் ஓபன்: அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்திய மார்கெட்டா

ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின் ஓபன்: அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்திய மார்கெட்டா
Published on

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது அரையிறுதிச் சுற்று போட்டிகள் நடந்தன.

இன்று நடந்த ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com