பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா

ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா
Published on

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.

இன்று நடந்த ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். 2வது செட்டை ரிபாகினா 6-3 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 7-6 (8-6) என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் முன்னணி வீராங்கனையான ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com