மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: போராடி அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: போராடி அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.

இதில் சபலென்கா முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்தார்.

சபலென்கா 2வது செட்டை 7-6 (9-7) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com