கனடா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனை வெற்றி

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது
sabalenka
Published on

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.

இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்த அரினா சபலென்கா, ஜப்பானின் மொயூகா உஜ்ஜிமா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் செக் குடியரசைச் சேர்ந்த நிகோலா பர்டுன்கோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் அரினா சபலென்கா, சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com